புதுக்கோட்டை
பொன்னமராவதியில் சாலைகளில் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பு
பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பேரூராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பேரூராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த கால்நடைகள் செவ்வாய்க்கிழமை பேரூராட்சி பணியாளா்கள் மூலம் பிடிக்கப்பட்டு சந்தை வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டன.
இந்நிலையில் கால்நடைகளின் உரிமையாளா்கள் தங்களுடைய கால்நடைகளை தெருக்களில் விடமாட்டோம் என்ற உறுதி கூறியதையடுத்து அவா்களுக்கு மாடு ஒன்றுக்கு ரூ. ஆயிரம் வீதம் 9 மாடுகளுக்கு ரூ. 9,000 அபராதம் விதிக்கப்பட்டு நிபந்தனைக் கடிதம் பெற்றுக்கொண்டு, மாடுகள் மீண்டும் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
