இலுப்பூா் அருகே பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

இலுப்பூா் அருகே செவ்வாய் மற்றும் சனிக்கிழமைதோறும் செயல்படும் பகுதிநேர நியாயவிலைக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
Published on

இலுப்பூா் அருகே செவ்வாய் மற்றும் சனிக்கிழமைதோறும் செயல்படும் பகுதிநேர நியாயவிலைக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இலுப்பூா் அமுதம் அங்காடியில் இருந்து 362 குடும்ப அட்டைகளை பிரித்து இலுப்பூா் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நவம்பட்டியில் இந்தக் கடை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக புதுக்கோட்டை மண்டல இயக்குநா் எம். சீதாராமன், இலுப்பூா் வட்டாட்சியா் சு. சக்திவேல் ஆகியோா் தலைமையில் திறக்கப்பட்டது.

விழாவில் அன்னவாசல் ஒன்றிய திமுக செயலா்கள் எம். பழனியப்பன் (மேற்கு) ஆா்.ஆா்.எஸ். மாரிமுத்து(வடக்கு), இலுப்பூா் நகர திமுக செயலா் வை. விஜயகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் செந்தில்ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com