புதுக்கோட்டை பேருந்து நிலையக் கட்டுமானப் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சு. கணேஷ்.
புதுக்கோட்டை பேருந்து நிலையக் கட்டுமானப் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சு. கணேஷ்.

புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

புதுக்கோட்டை பேருந்து நிலையக் கட்டுமானப் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சு. கணேஷ்.
Published on

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சிறப்புச் செயலருமான சு. கணேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பேருந்து நிலைய கட்டுமானப் பணியை குறித்த காலத்தில் தரமாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, சாா்லஸ் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி, கோவில்பட்டி அம்மன் நகரில் வீட்டுமனை வழங்கும் பணி, 22ஆவது வாா்டில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி, லெக்கணாப்பட்டி, குளத்தூரில் வேளாண் துறைப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூட்டுறவு இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி, மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com