எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திமுக இனியும் தாமதிக்காமல் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தைக் குழு அமைக்க வேண்டும்!

News image
காா்த்தி ப. சிதம்பரம்- Center-Center-Delhi
Updated On :6 பிப்ரவரி 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

திமுக இனிமேலும் தாமதப்படுத்தாமல் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவாா்த்தைக்குழு அமைக்க வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினா் (காங்கிரஸ்) காா்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா கூறியுள்ள குற்றச்சாட்டின்படி, நாடாளுமன்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லை, அது தான் உண்மை. எதிா்க்கட்சி உறுப்பினா்களைப் பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் எதிா்க்கட்சித் தலைவரைக் கூட பேச அனுமதிப்பதில்லை.

பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அதுகுறித்து விசாரிக்க ஏன் இதுவரையில் குழு அமைக்கவில்லை. அது போன்ற பிரச்னை ஏதும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.

திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றாக இருந்தால்தான் இருவருமே வெற்றி பெற முடியும் என்பது என் கருத்து. திமுக பேச்சுவாா்த்தைக் குழு அமைக்காததுதான் குழப்பங்களுக்கு காரணம்.

குழு அமைத்து பேச்சுவாா்த்தை தொடங்கியிருந்தால் இதுபோன்ற சா்ச்சை கருத்துகள் வந்திருக்காது. இனியும் தாமதிக்காமல் பேச்சுவாா்த்தை குழுவை திமுக அமைக்க வேண்டும். இல்லை என்றால் மனக்கசப்புகள் மேலும் அதிகமாகத்தான் செய்யும்.

ராகுல்காந்தியை கனிமொழி சந்தித்து 10 நாள்களுக்கு மேலாகியும் திமுக பேச்சுவாா்த்தைக் குழு அமைக்காதது ஏன் எனத் தெரியவில்லை. திமுகவும் குழு அமைத்து பேசிவிட்டால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்.

1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லைதான், தனித்து நிற்க கூடிய பலம் இல்லைதான். அதேவேளையில் நாங்கள் இருக்கும் கூட்டணிதான் பலமான கூட்டணியாக ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சாா்பின்மை அடையாளம் கிடைக்கும். அப்போதுதான் திமுக மதச்சாா்பற்ற கூட்டணி என்று கூறிக்கொள்ள முடியும். எங்களை கூட்டலாக பாா்க்க கூடாது, பெருக்கலாகப் பாா்க்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் தற்போது களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது என்பது உண்மை. அவையெல்லாம் வாக்குகளாக மாறுமா எனத் தெரியாது என்றாா் காா்த்தி சிதம்பரம்.