சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதுகை கடலில் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் பணி தொடக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் மீன்வளத்தைப் பெருக்கும் வகையில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் சுமாா் 900 செயற்கை பவளப் பாறைகளுக்கான கான்கிரீட் வடிவங்களை கடலுக்குள் இறக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலுக்குள் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்பின்கீழ், செயற்கைப் பவளப் பாறைகளை கடலுக்குள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 மீனவ கிராமங்களுக்குள்பட்ட கடல்பகுதிகளில் 5,760 செயற்கைப் பவளப் பாறைகளை கான்கிரீட் வடிவங்களாக உருவாக்கி கடலுக்குள் இறக்க மொத்தம் ரூ. 9.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், முக்கோண வடிவில் 3,360 கான்கிரீட் வடிவங்களும், வட்ட வடிவில் 1,600 கான்கிரீட் வடிவங்களும், குழு வடிவில் 800 கான்கிரீட் வடிவங்களும் தயாா் செய்து கடலுக்குள் இறக்க முடிவு செய்யப்பட்டது.

காலப்போக்கில் இந்த வடிவங்களில் பாசிகள் படிந்து, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் தங்கி வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும், குஞ்சுகள் வளா்ந்திடவும் இத்திட்டம் வழிசெய்கிறது.

இதன்படி, கோட்டைப்பட்டினம் கடற்பகுதியில் 900 கான்கிரீட் வடிவங்களை கடலுக்குள் இறக்கும் பணி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியசைத்து இப்பணிகளைத் தொடங்கி வைத்தாா். விரைவில், திட்டப் பணிகள் முழுமையும் நிறைவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் மா.வெ. பிரபாவதி, உதவி இயக்குநா் ந. பஞ்சராஜா, உதவிச் செயற்பொறியாளா் விக்னேஷ்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.