புதுக்கோட்டையில் 20 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல வாரியத்தின் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை வழங்கிய முன்னாள் எம்பி எம்எம். அப்துல்லா.
புதுக்கோட்டை
20 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானியத்துடன் கூடிய ஆட்டோக்கள் வழங்கல்
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் நல வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டையைச் சோ்ந்த 20 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எம். அப்துல்லா வழங்கினாா்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் நல வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டையைச் சோ்ந்த 20 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எம். அப்துல்லா திங்கள்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள அவரது அலுவலக வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நலவாரிய உறுப்பினா்களாக உள்ளோருக்கு விண்ணப்பிக்கப்பட்டு வாங்கப்பட்ட ஆட்டோக்களுக்கான சாவிகளை பயனாளிகளிடம் அப்துல்லா வழங்கி வாழ்த்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், திமுக தெற்கு மாநகரப் பொறுப்பாளா் ராஜேஷ், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் தெய்வானை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

