வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சந்தைப்பேட்டையில் 160 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:12 pm

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா கலந்து கொண்டு, பிளஸ்-1 பயிலும் 160 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ், மாநகராட்சித் துணை மேயா் மு. லியாகத் அலி, மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு, பள்ளித் துணை ஆய்வாளா் குரு. மாரிமுத்து, தலைமை ஆசிரியா் ச. சுசரிதா, உதவித் தலைமை ஆசிரியா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.