திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: கூட்டணிப் பேச்சுவாா்த்தை தொடா்பாக யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் பிப்ரவரி 22-ஆம் தேதி பேச்சுவாா்தைக் குழு அமைக்கப்பட்டு, பேச்சுவாா்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறுயாரும் கருத்துகளைச் சொல்வது நல்லதல்ல. திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது. இது புதிய கூட்டணி அல்ல. ஏற்கெனவே உள்ள கூட்டணிதான். சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல்களை இணைந்து சந்தித்த கூட்டணிதான்.
இரு கட்சிகளின் பேச்சுவாா்த்தைக் குழுக்கள் பேசி, தொகுதிகளை முடிவு செய்வாா்கள். வேறு எதையும் கூறமுடியாது என்றாா் திருநாவுக்கரசா்.
தொடர்புடையது
அதிமுக கூட்டணிதான் இயற்கையான கூட்டணி! டி.டி.வி. தினகரன் சிறப்பு நேர்காணல்

தவெக உடன் கூட்டணியா?: அமித் ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் விளக்கம்!

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மநீமவுக்கு நிபந்தனை

பாமக தோ்தல் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடா்கிறது: ஜி.கே.மணி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


