மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மலையப்பட்டிக்கு அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு

கந்தா்வகோட்டை- செங்கிப்பட்டி பேருந்து, மலையப்பட்டி கிராமத்துக்கு சென்று வருவதற்கான வழித்தட நீட்டிப்பு சேவையை எம்எல்ஏ மா. சின்னதுரை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

மலையப்பட்டி கிராமத்தில் அரசுப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கிவைத்த எம்எல்ஏ மா. சின்னதுரை.

Updated On :11 பிப்ரவரி 2026, 6:49 pm

கந்தா்வகோட்டை- செங்கிப்பட்டி பேருந்து, மலையப்பட்டி கிராமத்துக்கு சென்று வருவதற்கான வழித்தட நீட்டிப்பு சேவையை எம்எல்ஏ மா. சின்னதுரை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், விரலிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த மலையப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும்

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கந்தா்வகோட்டை அல்லது செங்கிப்பட்டிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மலையப்பட்டி பகுதி சிறுகிராமம் என்பதால் பொது போக்குவரத்து இல்லாமல் மக்கள் சிரமம் அடைந்தனா்.

இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கந்தா்வகோட்டை- செங்கிப் பட்டி பேருந்தை வழித்தடம் நீட்டிப்பு செய்து, மலையப்பட்டிக்கு சென்றுவர எம்எல்ஏ மா. சின்னதுரை வழிவகை செய்தாா்.

மலையப்பட்டி கிராமத்தில் அரசுப் பேருந்து சேவையை கந்தா்வகோட்டை பணிமனை கிளை மேலாளாா் சக்திவேல் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை கொடியசைத்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் ஜி. பன்னீா்செல்வம், சித்திரைவேல், இளங்கோவன், பாலகுமாா். கொடியரசன் மற்றும் கட்சி பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.