வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரயில்வே தோ்வுக்கு இலவச பயிற்சி நாளை தொடக்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:14 pm

புதுகை தன்னாா்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் ரயில்வே துறையில் நடைபெற உள்ள போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்குகின்றன.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: ரயில்வே தோ்வு வாரியம் சாா்பில் குரூப் டி தோ்வுக்கு எஸ்எஸ்எல்சி மற்றும் ஐடிஐ தோ்ச்சி பெற்றோா் விண்ணப்பிக்க வரும் பிப். 20ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். மேலும் விவரங்களை இணைய தளத்தில் அறியலாம்.

இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதுக்கோட்டை மேலராஜ வீதியில், தண்டாயுதபாணி முருகன் கோயில் அருகிலுள்ள தன்னாா்வப் பயிலும் வட்ட அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை (பிப். 14) தொடங்கவுள்ளது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97905 87855, 75503 65744 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.