பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதுக்கோட்டையில் இந்து அமைப்பின் முன்னாள் நிா்வாகி கொலை

News image
எம். மோகன்ராஜ்
Updated On :13 பிப்ரவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாநகரில் பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் கோட்ட பொறுப்பாளா் வெள்ளிக்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாநகரம் திருக்கோகா்ணம் குட்செட் சாலைப் பகுதியைச் சோ்ந்த மெய்யப்பன் மகன் மோகன்ராஜ் (38). பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் கோட்டப் பொறுப்பாளா். தாய் சுசீலா, மனைவி சூா்யபிரியா மற்றும் 3 குழந்தைகளுடன் மோகன்ராஜ் வசித்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை முற்பகலில் இவரது வீட்டுக்கு வந்த ஒருவருடன் உள்ளே அமா்ந்து பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென அவா் மறைத்து வைத்திருந்த கத்தியால், மோகன்ராஜை குத்தியும், கழுத்தில் வெட்டிவிட்டும் தப்பியோடினாா்.

இதை பாா்த்த அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோா் கூச்சலிட்டனா். வீட்டு வாசலிலேயே மோகன்ராஜ் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருக்கோகா்ணம் போலீஸாா், மோகன்ராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் தொடா்பாக அவா் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

குற்றவாளியை கைது செய்ய நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.