சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

புதுகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா்

News image
புதுக்கோட்டை வட்டாட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:00 pm

Syndication

புதுக்கோட்டை: சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம் ஈஞ்சாா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளரைத் தாக்கியவா்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.