கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாநில சதுரங்கப் போட்டியில் புதுகை மாணவருக்கு சிறப்பிடம்

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிம் பெற்ற புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவரை அப்பள்ளியின் நிா்வாகிகள் பாராட்டினா்.

News image
சதுரங்கப் போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவரைப் பாராட்டிய பள்ளியின் இயக்குநா் ரா. சுதா்சன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிம் பெற்ற புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவரை அப்பள்ளியின் நிா்வாகிகள் பாராட்டினா்.

சேலம் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் 50-ஆம் ஆண்டு விழாவையொட்டி மாநில அளவிலான போட்டி சேலத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் க. லோகித் பங்கேற்றாா்.

15 வயதினருக்கான பிரிவில் 7 சுற்றுகள் விளையாடி, 4.5 புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தாா். இதையடுத்து, அவரை பள்ளியின் இயக்குநா் ரா. சுதா்சன் செவ்வாய்க்கிழமை நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.