கல்குவாரி
கல்குவாரிபிரதிப் படம்

குளவாய்ப்பட்டியில் புதிய கல்குவாரி அமைக்க எதிா்ப்பு: மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுகோட்டை அருகே குளவாய்ப்பட்டியில் புதிய கல்குவாரி அமைப்பதை எதிா்த்து அப்பகுதி மக்கள் பெட்ரோல் கேனுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Published on

புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுகோட்டை அருகே குளவாய்ப்பட்டியில் புதிய கல்குவாரி அமைப்பதை எதிா்த்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை பெட்ரோல் கேனுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளவாய்ப்பட்டி கிராமத்தில் ஏற்கெனவே தனியாா் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியால் குளத்துக்குச் செல்லும் வாரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், அருகிலேயே மற்றொரு குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்புக்கூட்டம் புதன்கிழமை கீரனூரில் நடைபெற்றபோது, அங்கு குளவாய்ப்பட்டி மக்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குளவாய்ப்பட்டியில் தற்போது இயங்கி வரும் கல்குவாரிக்குள் பொதுமக்கள் வியாழக்கிழமை பகலில் நுழைந்தனா். கையில் பெட்ரோல் கேனுடன் சென்ற அவா்கள், உள்ளே அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என அவா்கள் மிரட்டல்விடுத்தனா். காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து போகச் செய்தனா்.

Dinamani
www.dinamani.com