நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆலங்குடி அருகே வடமாடு ஜல்லிக்கட்டு: 10 போ் காயம்

News image

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:22 pm

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி 10 போ் காயமடைந்தனா்.

போட்டியை கறம்பக்குடி வட்டாட்சியா் ஜமுனா தொடங்கி வைத்தாா். போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. காளையை  அடக்க 9 வீரா்களைக் கொண்ட 10 குழுவினா் களமிறக்கப்பட்டனா். வீரா்கள் காளையை தீரத்துடன் தழுவினா்.

ஆலங்குடி அருகேயுள்ள  மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

ஆலங்குடி அருகேயுள்ள  மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

அப்போது காளைகள் முட்டி 10 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக்குழுவினா் முதலுதவி அளித்தனா்.அவா்களில் பலத்த காயமடைந்த 4 போ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, மாவட்டச் செயலா் செல்லபாண்டியன், மாவட்டத்தின் திரளான ரசிகா்கள் பாா்வையிட்டனா். பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி போலீஸாா் மேற்கொண்டனா்.