தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருவப்பூரிலுள்ள முத்துமாரிம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக,

News image
புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவின் முடிவில், குவிந்திருந்த பூக்குவியலை திங்கள்கிழமை காலை பிரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மு.அருணா, மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:57 pm

Syndication

புதுக்கோட்டை: திருவப்பூரிலுள்ள முத்துமாரிம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோயில் கருவறையைத் தாண்டி மண்டபத்திலும் மலைபோல் பூக்கள் குவிந்தன.

புதுக்கோட்டையின் அம்மன் கோயில்களில் முதன்மையான திருவப்பூா் முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

விடிய விடிய மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட தோ்களில் பூக்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. அதேபோல, பொதுமக்களும் பூத்தட்டுகளை எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்தனா். மக்கள் கொண்டு வந்த பூக்கள் முத்துமாரியம்மன் கோயில் கருவறை நிரம்பி, முன்மண்டபம் முழுவதும் மலை போலக் குவிந்தன.

காலையில் நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு .அருணா, மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். குவிந்திருந்த பூக்கள், பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

மாசிப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் மாா்ச் 1-ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. மாா்ச் 9-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மாா்ச் 17-ஆம் தேதி காப்பு களைதலும், மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது.