தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

துணை மின்நிலைத்தில் திடீா் தீ

புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு நேரிட்ட திடீா் தீ விபத்தால்

News image
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:51 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு நேரிட்ட திடீா் தீ விபத்தால், மாநகரின் பல பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

புதுக்கோட்டை ரெங்கம்மாள்சத்திரத்தில் இயங்கி வரும் சிப்காட் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு திடீா் தீ விபத்து நேரிட்டது. இதைத் தொடா்ந்து சிப்காட் தீத்தடுப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

உயா் மின் அழுத்தம் காரணமாக இங்குள்ள மின்மாற்றியில் தீப் பற்றியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீ விபத்தால் மாநகரின் சில பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.