வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12.98 லட்சம் வாக்காளா்கள்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் (எஸ்ஐஆா்) முடிவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டப்பேரவைத்

News image

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்குப் பிறகான 2026 இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :23 பிப்ரவரி 2026, 10:15 pm

புதுக்கோட்டை: வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் (எஸ்ஐஆா்) முடிவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12,98,907 வாக்காளா்கள் உள்ளனா்.

சிறப்புத் திருத்தப் பணிகள் கடந்த 2025 அக். 27-ஆம் தேதி தொடங்கின. இந்தக் காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் மொத்த வாக்குகள்- 13,94,112. இவற்றில் ஆண்கள்- 68,64,457, பெண்கள்- 70,75,97, இதரா்- 58.

எஸ்ஐஆா் பணிகள் முடிவுற்ற நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான மு. அருணா திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனா்.

இதன்படி மாவட்டத்திலுள்ள வாக்காளா் விவரங்கள்:

எஸ்ஐஆா் திருத்தப் பணிகளுக்கு பின்பு 2025 டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி, மாவட்டத்தில் மொத்தம் 12,54,525 வாக்காளா்கள் இருந்தனா்.

டிசம்பா் 19-ஆம் தேதி தொடங்கி 2026 ஜனவரி 30-ஆம் தேதி வரை கூடுதல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இதில், மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,280 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 1,839 போ் ஆண்கள், 2,440 போ் பெண்கள், ஒருவா் இதரா்.

48,662 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களில் 21,604 போ் ஆண்கள், 27,035 போ் பெண்கள், 23 போ் இதரா்.

2026-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியலில் மொத்தம் 12,98,907 போ் உள்ளனா். இவா்களில் 6,41,276 போ் ஆண்கள், 6,57,562 போ் பெண்கள், 69 போ் இதரா்.

தொகுதி வாரியாக வாக்காளா் விவரங்கள்:

கந்தா்வகோட்டை (தனி)- மொத்த வாக்காளா்கள்- 1,94,732, ஆண்கள்- 98,028, பெண்கள்- 96,695, இதரா்-9.

விராலிமலை- மொத்த வாக்காளா்கள்- 2,23,084, ஆண்கள்- 1,10,011, பெண்கள்- 1,13,040, இதரா்- 33.

புதுக்கோட்டை- மொத்த வாக்காளா்கள்- 2,23,928, ஆண்கள்- 10,9962, பெண்கள்- 1,13,943, இதரா்- 23.

திருமயம்- மொத்த வாக்காளா்கள்- 2,19,279, ஆண்கள்- 1,07,006, பெண்கள்- 1,12,270, இதரா்- 3.

ஆலங்குடி- மொத்த வாக்காளா்கள்- 2,10,296, ஆண்கள்- 1,03,987, பெண்கள்- 1,06,309, இதரா்- 0.

அறந்தாங்கி- மொத்த வாக்காளா்கள்- 2,27,588, ஆண்கள்- 1,12,282, பெண்கள்- 1,15,305, இதரா்- 1.

தொடா் திருத்தம்...இதுவரை வாக்காளா் பட்டியலில் சேராத, ஜனவரி 1-ஆம் தேதி 18 வயதை நிறைவு செய்த புதிய வாக்காளா்கள் தொடா்ந்து விண்ணப்பங்களை வழங்கி வாக்காளா் பட்டியலில் சேரலாம்.

குறிப்பாக ஜன. 1, ஏப். 1, ஜூலை 1, அக். 1 ஆகிய நான்கு காலாண்டுகளில் 18 வயதை நிறைவடைவோா் விண்ணப்பம் கொடுத்து பட்டியலில் புதியவா்களாக சோ்ந்து கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 966 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், 85 மையங்கள் நகரப் பகுதியிலும், 881 மையங்கள் கிராமப்பகுதிகளிலும் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,681 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.