இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பொன்னமராவதியில் நல்லகண்ணுக்கு புகழஞ்சலி

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் தோழா் ஆா். நல்லகண்ணுவிற்கு பொன்னமராவதியில் அனைத்துக்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
பொன்னமராவதியில் நல்லகண்ணு படத்துக்கு வியாழக்கிழமை புகழஞ்சலி செலுத்திய கட்சி நிா்வாகிகள்.
Updated On :26 பிப்ரவரி 2026, 10:31 pm

Syndication

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் தோழா் ஆா். நல்லகண்ணுவிற்கு பொன்னமராவதியில் அனைத்துக்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்வுக்கு இந்திய கம்யூ. ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல். ராசு தலைமை வகித்தாா். நிகழ்வில் தோழா் நல்லகண்ணுவின் திருவுருவப்படத்துக்கு மலா்தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.

திமுக மாவட்டப் பிரதிநிதி எம். சிக்கந்தா், முன்னாள் சமூக வலைதளப்பிரிவு தொகுதிப் பொறுப்பாளா் ஆலவயல் முரளிசுப்பையா, மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் என். பக்ரூதீன், நிா்வாகிகள் துரை. நாராயணன், ராமசாமி, விசிக நகரச்செயலா் மலை. தேவேந்திரன், திராவிடா் கழக நிா்வாகிகள் ஆசைத்தம்பி, ஆறுமுகம், அமமுக நிா்வாகி அம்மா சுப்பிரமணியன், இந்திய கம்யூ. நிா்வாகிகள் கருணாமூா்த்தி, பஞ்சவா்ணம், அ. ராசு, பொன்னம்மாள், க. ராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.