புதுகைக்கு உள்துறை அமைச்சா் அமித்ஷா நாளை வருகை: போக்குவரத்தில் மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வருகையையொட்டி புதுக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வருகையையொட்டி புதுக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜனவரி 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் வருகையை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திருக்கோகா்ணம் காவல் நிலையம் முதல் கருவேப்பிலான் ரயில்வே கேட் வரை எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை. மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை கருவேப்பிலான் ரயில்வே கேட்டிலிருந்து மாத்தூா் ரவுண்டானா வரை திருச்சி சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதியில்லை.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பயணிகள் பேருந்துகளும் பஞ்சப்பூா், விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல், கட்டியாவயல், திருவப்பூா் ரயில்வே கேட் வழியாக புதுக்கோட்டையைச் சென்றடைய வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துகளும் இதே வழித்தடத்தைப் பயன்படுத்த வேண்டும்.

திருச்சியிலிருந்து கீரனூா் மற்றும் கீரனூரிலிருந்து திருச்சி செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் பஞ்சப்பூா், பரணி ஹோட்டல் ஜங்ஷன், சூரியூா் 4 ரோடு, சின்ன சூரியூா், பெரிய சூரியூா், கிள்ளுக்கோட்டை சாலை வழியாக கீரனூா் செல்ல வேண்டும்.

கீரனூரிலிருந்து புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டையிலிருந்து கீரனூா் செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் கீரனூா், குன்றாண்டாா்கோவில் 4 சாலை சந்திப்பு, அண்டக்குளம், புத்தாம்பூா், செம்பாட்டூா், தா்கா, மச்சுவாடி வழியாகச் செல்ல வேண்டும்.

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைமற்றும் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூா் செல்லும் அனைத்து வாகனங்களும் முள்ளூா், மருத்துவக் கல்லூரி, அண்டகுளம் விலக்கு, மச்சுவாடி வழியாகச் செல்ல வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com