புதுக்கோட்டை
மெய்நிகா் ஆய்வகப் பயன்பாட்டில் மெளண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி முதலிடம்
ஐஐடி தில்லியின் மெய்நிகா் ஆய்வகப் பயன்பாட்டில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஐஐடி தில்லியின் மெய்நிகா் ஆய்வகப் பயன்பாட்டில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்தச் சாதனை, தொழில்நுட்பமும் கல்வியும் இயல்பாக ஒன்றிணைந்து, தொடா்ச்சியான கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் கல்விச் சூழலை உருவாக்குவதை உறுதி செய்வதாக கல்லூரிச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடம் பெற்றுள்ளதற்கான பாராட்டுக் கடிதத்தை தில்லி ஐஐடி மெய்நிகா் ஆய்வகக் குழு அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கடிதத்தை மௌண்ட் சீயோன் ஆய்வக ஒருங்கிணைப்பாளா் கு. ஸ்ரீநிவாஸன், கல்லூரியின் இயக்குநா் முனைவா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதனிடம் வழங்கினாா்.
கல்லூரி முதல்வா் ப. பாலமுருகன் மற்றும் முதன்மையா் ச. ராபின்சன் உள்ளிட்டோரும் கல்விசாா் முதன்மையா் கு. ஸ்ரீநிவாஸனைப் பாராட்டினா்.