வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: புதுகை பாா்வையாளா் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மாவட்டப் பாா்வையாளரும், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருமான எம். லட்சுமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.










