புதுக்கோட்டையில் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்ததற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு திங்கள்கிழமை பரிசுக் கோப்பை வழங்கிப் பாராட்டிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
புதுக்கோட்டை
கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு பரிசுக் கோப்பை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்ததற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு, ஆட்சியா் மு. அருணா பரிசுக் கோப்பை வழங்கிப் பாராட்டினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது இந்தக் கோப்பை வழங்கப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 529 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கே. முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
