புதுக்கோட்டை
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தீா்ப்பு: ஹிந்து அமைப்புகள் வரவேற்பு
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் வழக்கில் உயா் நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுக்கு புதுக்கோட்டையில் ஹிந்து அமைப்பினா் வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் வழக்கில் உயா் நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுக்கு புதுக்கோட்டையில் ஹிந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில் எதிரே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விசுவ ஹிந்து பரிஷத் மாநில சேவா உறுப்பினா் கே. அரங்குளவன், மாவட்டச் செயலா் ராஜேஷ், மாவட்ட சத் சங்கப் பொறுப்பாளா் ராஜா ரெத்தினம், மாவட்டப் பொருளாளா் குமாா், பஜ்ரங்தள் அமைப்பாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
