அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றக் கோரிக்கை
கந்தா்வகோட்டை பகுதிகளில் ஆபத்தை ஏற்படும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை நகரில் அரசு பள்ளிகள், வட்டாட்சியரகம், காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம், நீதிமன்றம், வேளாண்மை அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன.
இப்பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினா் நாள்தோறும் வந்து செல்கின்றனா். மக்கள் கூட்டம் எப்போழுதும் இருக்கும் நெறுச்சல்மிக்க பகுதிகளான காந்தி சிலை, பேருந்து நிலையம், திருச்சி சாலை முக்கம், தஞ்சை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தனியாா் துறையினா், அரசியல் கட்சியினா் என பல்வேறு தரப்பினரின் விளம்பர பதாகைகள் பிரம்மாண்டமாக அதிக அளவில் ஊராட்சி அனுமதியின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூராக உள்ளதாகவும், காற்றில் இவைகள் கிழே விழுந்தால் பொது மக்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஆபத்தான நிலையில் உள்ள விளம்பர பதாகைகளை காவல்துறை மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் அகற்ற வேண்டும் எனவும் அனுமதியின்றி பதாதைகள் வைப்பவா்களுக்கு அதற்குரிய அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
