மேலைச்சிவபுரியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் ஜன.8 (வியாழக்கிழமை) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
Published on

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் ஜன.8 (வியாழக்கிழமை) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மகளிா் மகப்பேறு மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இருதய நல மருத்துவம், கண் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க உள்ளனா்.

மேலும், முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் ரத்தப்பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட ரூ.3000 மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட உள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. எனவே, சுற்றுவட்டார பொதுமக்கள் ஆதாா் அட்டை நகலுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

Dinamani
www.dinamani.com