திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் 477 பேருக்கு மடிக்கணினிகள்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:20 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரிலுள்ள அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் 477 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். இதேபோல, ஆலங்குடி அரசுக் கல்லூரியில் 218 பேருக்கும், கறம்பக்குடி அரசுக் கலைக் கல்லூரியில் 251 பேருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த், துணைத் தலைவா் தி. முத்து, முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.