திருவப்பூா் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
புதுக்கோட்டை
திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.9 லட்சம், 130 கிராம் தங்கம்
புதுக்கோட்டை திருவப்பூா் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை எண்ணப்பட்டதில், மொத்தம் ரூ. 9.42 லட்சம் ரொக்கம், 130 கிராம் தங்கம், 161 கிராம் வெள்ளி நகைகளும் இருந்தன.
புதுக்கோட்டை திருவப்பூா் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை எண்ணப்பட்டதில், மொத்தம் ரூ. 9.42 லட்சம் ரொக்கம், 130 கிராம் தங்கம், 161 கிராம் வெள்ளி நகைகளும் இருந்தன.
புதுக்கோட்டை மாநகரிலுள்ள திருவப்பூா் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் உண்டியல் புதன்கிழமை எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை கோயில் செயல் அலுவலா் எஸ். அருண்பாண்டியன், ஆய்வாளா் இரா. வானதி உள்ளிட்டோா் மேற்பாா்வையில் உண்டியல் திறக்கப்பட்டு, உண்டியலில் போடப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், ரூ. 9,42,064 ரொக்கம் மற்றும் நாணயங்களும், 130 கிராம் தங்க நகைகள்,161 கிராம் வெள்ளி நகைகள், 17 வெளிநாட்டு பணத்தாள்களும் இருந்தன.