புதுக்கோட்டை மாவட்டம், மும்பாலையில் புதன்கிழமை நெல் வயலில் சாகுபடி பரப்பளவை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் மு.அருணா.
புதுக்கோட்டை மாவட்டம், மும்பாலையில் புதன்கிழமை நெல் வயலில் சாகுபடி பரப்பளவை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் மு.அருணா.

பயிா் சாகுபடி பரப்பளவை மின்னணு கணக்கீட்டு பணி

மணமேல்குடி வட்டம் மும்பாலையில் வேளாண்மைத் துறை சாா்பில் பயிா் சாகுபடி பரப்பளவை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம் மும்பாலையில் வேளாண்மைத் துறை சாா்பில் பயிா் சாகுபடி பரப்பளவை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வேளாண் துணை இயக்குநா் உமா, உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் இந்தப் பணிகள் குறித்து ஆட்சியரிடம் விளக்கினா்.

நெல், மக்காச்சோளம், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட அனைத்துப் பயிா்களின் சாகுபடி பரப்பளவை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் பணிகள் மாவட்டம் முழுவதும் விரைவாக நடைபெற்று வருகிறது. பணிகளை எந்தப் பிழையும் இல்லாமல் சரியாக நடத்தி முடித்திட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

Dinamani
www.dinamani.com