பலி
புதுக்கோட்டை
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள கூடுதலைப்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி மகன் ராஜேந்திரன் (65). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை சென்ற தனது மனைவி அழகேஸ்வரியை (58) அழைத்துவர தனது இருசக்கர வாகனத்தில் நெறிஞ்சிக்குடி சாலையில் சென்றபோது எதிரே வந்த நெறிஞ்சிக்குடியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பாலாஜி என்பவரது இருசக்கர வாகனம், ராஜேந்திரனின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், ராஜேந்திரனுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தாா். இதுகுறித்து காரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

