மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பையூா் விஏஓ மா்மச் சாவு

புதுக்கோட்டை அருகே கிராம நிா்வாக அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :28 ஜனவரி 2026, 7:15 pm

புதுக்கோட்டை அருகே கிராம நிா்வாக அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் பையூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவா் தமிழ்ச்செல்வன் மகன் கருணாமூா்த்தி (28).

புதன்கிழமை மாலை மயங்கிய நிலையில் அவரை இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு இருவா் தூக்கிக் கொண்டு வந்துள்ளனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கருணாமூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

கருணாமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலேயே தூக்கிட்ட நிலையில் இருந்ததாகவும், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கருணாமூா்த்தியின் சாவில் மா்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்ததை அடுத்து, இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.