புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு .அருணா (வலது).
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு .அருணா (வலது).

காலை உணவுத் திட்டத்தை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க அறிவுரை

பள்ளி மாணவா்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றை அந்தந்தப் பகுதி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
Published on

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காலை உணவுத் திட்டத்துக்கான மாவட்ட அளவிலான கணக்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய அவா் இதைக் குறிப்பிட்டாா்.

பள்ளிகளில் மாணவா்களுக்கு குறித்த நேரத்தில், தரமான உணவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், புகாா்களையும் அவ்வப்போதே சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க அவா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் க.ந. கோகுலப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com