தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

பொன்னமராவதி, கொடும்பாளூா், ராஜாளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - பிரதிப் படம்

Published On :

பொன்னமராவதி மின் உபகோட்டத்துக்குள்பட்ட கொன்னையூா், நகரப்பட்டி, மேலத்தானியம் ஆகிய துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிவமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவலூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூா், தொட்டியம்பட்டி, மைலாப்பூா், மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, காரையூா், அரசமலை, மேலத்தானியம், ஒலியமங்கலம், நல்லூா், சடையம்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

கொடும்பாளூரில்.... விராலிமலை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ராஜாளிபட்டி, அத்திப்பள்ளம், வானதிராயன்பட்டி, காளப்பனூா், கொடும்பாளூா், விராலூா், சங்கம்பட்டி, ராம கவுண்டம்பட்டி, தென்னம்பாடி, வடகாட்டுப்பட்டி, செவனம்பட்டி, அகரப்பட்டி, வாடியான் களம், பூலாங்குளம், மாதுரப்பட்டி, மூவா் கோயில், தேன்கனியூா், பொய்யாமணி, கட்டகுடி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

எனினும், விராலிமலை நகா் பகுதிகளில் வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என்று விராலிமலை மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.