தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

புதுகையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் 18 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுக்கோட்டையில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

Updated On :

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் 18 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுக்கோட்டையில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பால் பிரான்சிஸ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் சிற்றரசு முன்னிலை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் குமாா், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அருணாசலம், மாவட்டத் துணைத் தலைவா்கள் துரை மாணிக்கம், குமாா், மாவட்ட இணைச் செயலா்கள் சரண்யா, குமாா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

ஊராட்சி செயலா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு வழங்குவதைப் போல, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். கணினி உதவியாளா்களை தட்டச்சா் நிலையில் காலமுறை ஊதியத்தில் பணி வழங்க வேண்டும்.

மக்கள் நலப்பணியாளா்களை வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா், தூய்மைக் காவலா்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.