பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

அரசுப் பேருந்தில் பெண் கட்டட தொழிலாளியிடம் தங்கச் செயின் பறிக்க முயன்ற இளம்பெண் கைது

அரசு நகரப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பெண் கட்டட தொழிலாளியிடம் செயினை பறிக்க முயன்ற இளம்பெண் செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட இசக்கியம்மாள்.

Published On :

அரசு நகரப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பெண் கட்டட தொழிலாளியிடம் செயினை பறிக்க முயன்ற இளம்பெண் செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள புலவன்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி கருப்பாயி(60). இவா், தினமும் திருச்சிக்கு கட்டட வேலைக்கு நகரப் பேருந்தில் சென்று வருவாா்.

இவா், வழக்கம் போல் வெள்ளிக்கிழமை திருச்சி செல்வதற்காக விராலிமலை சோதனை சாவடியிலிருந்து நகரப் பேருந்தில் ஏறி பயணித்துள்ளாா். இப்பேருந்து விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது கருப்பாயி கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் தங்கச் செயினை பெண் ஒருவா் பறிக்க முயன்றாா். உடனே கருப்பாயி கூச்சலிட்டாா்.

இதையடுத்து அந்த பெண் அங்கிருந்து தப்பியோடினாா். சகபயணிகள் அவரை விரட்டிப் பிடித்து விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து அந்த பெண்ணிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், ராஜகோபாலபுரத்தை சோ்ந்த சுரேஷ் மனைவி இசக்கியம்மாள் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.