
வழுத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கையெழுத்து இயக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வழுத்தூர் தர்ஹா பள்ளிவாசல் வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அரசியல் சாசன 44 பிரிவை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய 1 கோடி கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வழுத்தூர் தர்ஹா பள்ளிவாசல் வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அரசியல் சாசன 44 பிரிவை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய 1 கோடி கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் ஜில்பிகார் அகம்மது தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கிளை தலைவர் முகம்மது ஷெரீப், மாநில மாணவரணி அமைப்புக் குழு உறுப்பினர் மக்கிஃபைசல், காயிதே மில்லத் பேரவை (கத்தார்) இளைஞரணி செயலர் ஜூபைர் அகம்மது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யூசுப் அன்சாரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுதாஹீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், வழுத்தூர் ஜமாத்தார்களிடம் கோரிகைகயை வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது. இதில் கிளை செயலர் ஏ. கமாலுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கமாலுதீன் பைஜி, மாவட்ட பிரதிநிதி ஏ. நத்தர்ஷா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல், அய்யம்பேட்டை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மாவட்ட இணைச் செயலர் ராஜாஜி அப்துல் காசீம் தலைமையிலும், வடக்குமாங்குடியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முகம்மது சலீம் தலைமையிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






