தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறில் காவிரி மற்றும் அதிலிருந்து பிரியும் குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஆறுகள் ஓடுவதால் திருவையாறு என அழைக்கப்படுகிறது.
இத்தொகுதியில் முதன்மையான தொழில் விவசாயம். இங்கு நெல், வெற்றிலை கொடிக்கால், வாழை போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐயாறப்பர் திருக்கோயில், கர்நாடக இசை மேதையும், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் சமாதி, பூண்டி மாதா பேராலயம், அரசு இசைக் கல்லூரி போன்றவை உள்ளன.
இத்தொகுதி 1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் சிவாஜி கணேசன் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மொத்தம் 13 தேர்தல்களைச் சந்தித்துள்ள இந்தத் தொகுதியில் தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் இரு முறையும், திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றன.
எல்லைகள்: திருவையாறு வட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் ஒரு பகுதியும் கொண்ட இந்தத் தொகுதியில் இந்தலூர், கடம்பங்குடி, சோளகம்பட்டி, மாரனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராபட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, ராயந்தூர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர் இரண்டாம் சேத்தி, முதல் சேத்தி, பிள்ளையார்நத்தம், சீராளூர், வெண்ணலோடை, சக்கரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிக்குடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தொட்டாக்காடு, கொண்டவிட்டான்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளித்தோட்டம், ராமநாதபுரம் முதன்மை, கூடுதல், வண்ணாரப்பேட்டை முதன்மை, கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டயம்பட்டி, சுரக்குடிப்பட்டி, ராயமுண்டான்பட்டி,
புதுக்குடி வடக்கு, மனையேறிப்பட்டி,சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம், புதூர் சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பழையப்பேட்டை, தெற்கு சேத்தி, பழையபட்டி வடக்கு சேத்தி, புதுக்குடி, ஆச்சாம்பட்டி ஆகிய கிராமங்கள்.
கோரிக்கைகள்: இத்தொகுதயில் மழைக் காலத்தில் காவிரி கரையோரம் ஏற்படும் வெள்ள அபாயத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் சார்ந்த இத்தொகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். பூதலூர், செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயைச் சார்ந்த 81 ஏரிகளில் முழுமையாகத் தூர் வாரி, நீர் வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திருவையாறு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.
வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள் 2,48,389
ஆண்கள்1,22,612
பெண்கள்1,25,575
வெளிநாடுவாழ் இந்தியர்1
வாக்கு சாவடிகள்291
வெற்றியாளர்களும், வாக்குகளும்...
1957 - சுவாமிநாத மேற்கொண்டார்
(காங்கிரஸ்) 19,722
1962 - பழனி (காங்கிரஸ்) 33,332
1967 - ஜி. முருகையன்
(திமுக) 37,693
1971 - கோ. இளங்கோவன்
(திமுக) 37,139
1977 - கோ. இளங்கோவன்
(திமுக) 28,500.
1980 - எம்.ஜி.எம். சுப்பிரமணியன்
(அதிமுக) 42,636.
1984 - துரை. கோவிந்தராஜன்
(அதிமுக) 46,974
1989 - துரை. சந்திரசேகரன்
(திமுக) 36,981
1991 - பி. கலியபெருமாள்
(அதிமுக) 57,648.
1996 - துரை. சந்திரசேகரன்
(திமுக) 57,429.
2001 - கே. அய்யாறு வாண்டையார்
(அதிமுக) 55,579.
2006 - துரை. சந்திரசேகரன்
(திமுக) 52,723.
2011 - எம். ரெத்தினசாமி
(அதிமுக) 88,784.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.