விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை: விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் முடிவு

தமிழகம் முழுவதும் காவிரி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரத யாத்திரை நடத்துவது என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:35 am IST

தமிழகம் முழுவதும் காவிரி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரத யாத்திரை நடத்துவது என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து மத்திய அரசு மீது கண்டனம் தெரிவித்து,  சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இச்சங்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் காவிரி நீர் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  காவிரி ரத யாத்திரை ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சங்கத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், நிர்வாகிகள் சாமிநாதன், வரதராஜன், ஒருங்கிணைப்பாளர் சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.