/

டிச. 2-இல் நடத்தப்பட்ட  முத்திரை கொல்லர் பணிக்கான தேர்வு ரத்து

திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையரக ஆட்சி எல்லையில் காலியாக இருந்த முத்திரை கொல்லர் பணியிடங்களுக்காக டிச. 2-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:44 am IST

திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையரக ஆட்சி எல்லையில் காலியாக இருந்த முத்திரை கொல்லர் பணியிடங்களுக்காக டிச. 2-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் தெரிவித்திருப்பது: திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையரக ஆட்சி எல்லையில் காலியாக இருந்த முத்திரை கொல்லர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஏப். 2-ம் தேதி, ஆக. 28-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, டிச. 2-ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. தற்போது, அறிவிக்கைகள், எழுத்துத் தேர்வு, தேர்வு முடிவுகள் மற்றும் அதுதொடர்பான டிச. 14-ம் தேதி நாளிட்ட இவ்வலுவலகக் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி டிச. 28-ம் தேதி நடைபெறுவதாக இருந்த திறனறி தேர்வு, அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.