ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

பட்டுக்கோட்டையை அடுத்த  புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்திலுள்ள ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 20-வது ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:05 am

DIN

பட்டுக்கோட்டையை அடுத்த  புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்திலுள்ள ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 20-வது ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பட்டுக்கோட்டை கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர்  பி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ.முகமது அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். 
அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் இராம. குணசேகரன்,  காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் எஸ்.பி.கணபதி,  மாளியக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் ஆர்.பி.ரமேஷ், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ.ஆர்.ரகுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள்,  கல்வி,  விளையாட்டில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகள் பரிசுகள் வழங்கிப்  பாராட்டப்பட்டனர். 
விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வர் என். உதயகுமார் வரவேற்றார். ஆர். தனபால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 
முதுகலை ஆசிரியர் ஆர். போஸ்ராஜா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.