தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரக்கோரி பிரசாரம்

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவதற்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றார்

Updated On :9 ஜூலை 2018, 3:20 am

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவதற்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
மாணவர்கள் தற்போது அதிகளவில் மூடநம்பிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சட்டத்தை பயன்படுத்தி அறிவியல் மனப்பான்மையை புகுத்த வேண்டும். இதனை பள்ளி முதல் கல்லூரி வரை கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது. மத்திய அரசு கல்வித்துறையை வைத்து கொண்டு விளையாடி வருவதும், நாளுக்கொரு கொள்கை முடிவை எடுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. நீட் தேர்வின் மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களை வெளிமாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது.  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் அரசு, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஒன்றரை ஆண்டுகளாகியும் அமல்படுத்தாமல், மத்தியில் ஆள்பவர்கள் கிடப்பில் போட்டுள்ளனர். ஏன் நிராகரித்தனர் என இதுவரை தெரியவில்லை. இதனை தட்டி கேட்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.
கல்வியை மத்தியஅரசு காவி மயமாக்கி வருகிறது. தற்போது உள்ள கல்வியில் பொதுஒழுக்கம் இல்லை. மத்திய அரசின் பல்வேறு தேர்வு முறைகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவதற்காக நாட்டில் உள்ள பாஜக இல்லாத அனைத்து தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். எனது தலைமையில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்த பிரசாரம், முதல்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வரும் 22 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் வீரமணி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.