தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கார் டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவையாறு அருகேயுள்ள ஆச்சனூர் தொட்டித் தெருவைச் சேர்ந்தவர் சங்கிலி மகன் பூபதி (28). இவர் மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை காலை திருவையாறு கடை வீதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஆச்சனூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சடையான்தோப்பு அருகே சென்றபோது, திருக்காட்டுப்பள்ளியிலிருந்து திருவையாறு நோக்கி வந்து கொண்டிருந்த கார் டயர் வெடித்து பூபதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பூபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவையாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







