அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில்இலவச தொழில்நுட்பப் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழில் நுட்பப்

Updated On :21 மே 2018, 9:08 pm

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழில் நுட்பப் பயிற்சி முடித்த 530 மாணவ, மாணவிகளுக்கு அண்மையில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு தலைமை வகித்து பேசுகையில், 530 மாணவர்களுக்கும்
திருச்சிற்றம்பலம், பள்ளத்தூர், ஆலத்தூர், தாமரங்கோட்டை, கழுகப்புலிக்காடு, ஒட்டங்காடு ஆகிய விரிவாக்க மையம் மற்றும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இயங்கி வரும் பிரதான மையம் ஆகியவற்றில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெல்டிங், எலக்ட்ரீசியன், தையல், கணினி பயிற்சிகள், கைவினைப் பொருள்கள், சிறுதானிய உணவுகள், ரொட்டி ஆகியவற்றை தயாரிக்கும் பயிற்சிகள் கட்டணமின்றி இலவசமாக அளிக்கப்பட்டது என்றார்.
கழுகுப்புலிக்காடு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் மருத்துவர் கே.எம்.சக்திவேல் பயிற்சியை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினார்.
கல்லூரியின் கணினியியல் துறைத்தலைவர் டி.வின்சென்ட் வாழ்த்துரை வழங்கினார்.
சமுதாய மேம்பாட்டு ஆலோசகர் ஏ.அகஸ்டின் ரஞ்சித் வரவேற்றார். எலக்ட்ரிக்கல் பயிற்சியாளர் எஸ்.ரேமன்ட்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.துரை நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.