தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜேந்திரன் (55). இவர் செங்கிப்பட்டியில் உள்ள கைவிடப்பட்ட தனியார் ஊசி தயாரிக்கும் ஆலையில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கு திருட வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, திருடுவதற்கு இடையூறாக இருந்த ராஜேந்திரனை கடந்த ஜூன் 24 ஆம் தேதி தாக்கியது. அவர் ஜூன் 30 ஆம் தேதி இறந்தார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், திருமலைசமுத்திரம் பகுதியில் சனிக்கிழமை இரவு செங்கிப்பட்டி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இரு சிறுவர்களைப் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள் வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள் என்பதும், நண்பர்களான இவர்கள், தங்களுடைய மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து, செங்கிப்பட்டியில் உள்ள தனியார் ஊசி தயாரிக்கும் ஆலையில் திருடச் சென்றபோது, இடையூறாக இருந்த ராஜேந்திரனை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், இரு சிறுவர்களையும் கைது செய்ததுடன், மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


