எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பேராவூரணியில் "தீபாவளி' விழிப்புணர்வு பிரசாரம்

பேராவூரணியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :5 நவம்பர் 2018, 9:19 am IST

பேராவூரணியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. 
நீலகண்டப் பிள்ளையார் கோயில் அருகில் விழிப்புணர்வு பிரசாரத்தை வட்டாட்சியர் எல். பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். புதிய பேருந்து நிலையம்,  மெயின்ரோடு,  பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை,  ஆவணம் சாலை,  ரயிலடி உள்ளிட்ட முக்கிய இடங்களில் துண்டுப் பிரசுரம் வழங்கியும்,  ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். குடிசைப் பகுதிகளில் ராக்கெட் வெடிகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு, மத்தாப்பு,  வெடிகள் வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணியக்கூடாது. பருத்தியிலான ஆடைகளையே அணிய வேண்டும்.  திறந்த வெளியிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.  எதிர்பாராத விதமாக யார் மீதேனும் தீப்பற்றினால் அதிகம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க வேண்டும்.  எதிர்பாரா விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என பிரசாரத்தில் அறிவுறுத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.