மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அதிரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டம்

அதிராம்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பேரூர்  நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 3:58 am

அதிராம்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பேரூர்  நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் பாதையில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தையும்  துரிதமாக முடித்து, இவ்வழித்தடத்தில் விரைவில் ரயில் போக்குவரத்துச் சேவையைத் தொடங்க வேண்டும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதிரையில் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நோய்த் தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி.நசுருதீன் பங்கேற்று கட்சியில் புதிதாக இணைந்த அபுதாபி தமிழ்ச்சங்கப் பொதுச்செயலர் மு.நூ.காதர் முகைதீன், எம். முகமது இக்பால், எம்.அப்துல் ஜலீல் ஆகியோருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிப் பேசினார்.  
கூட்டத்துக்கு  அதிரை பேரூர் தலைவர் கே.கே. ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார்.  
செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றார். பேரூர் துணைச்செயலர் அபூபக்கர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.