ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி சார்பில் கண்ணத்தங்குடி மலையேறியம்மன் கோயில் வளாகத்தில் பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி கண்ணத்தங்குடி கிராமத்தை தன்னகத்தே இணைத்து கொண்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை கண்ணத்தங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு மலையேறியம்மன் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த தூய்மை பணியானது கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜா சௌந்தரபாண்டியன், திட்ட ஒருங்கிணைப்பாளர் க.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தூய்மை பணியில் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.