

பேராவூரணி அருகே பூக்கொல்லை கிராமத்திலுள்ள அனுசரணை ஆராய்ச்சி திடல் நடவுப் பணியில் தஞ்சாவூா் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டனா்.
கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். மாலதி மேற்பாா்வையில், சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலா் ச. சங்கவி, உதவி வேளாண்மை அலுவலா் பாலசந்தா் ஆகியோா் கண்காணிப்பில், வேளாண்மை கல்லூரி மாணவா்கள் ப. வெங்கடேசன், விஜய், வேலு, சி.ராஜேஷ்குமாா், தாமு, கபிலன், சூரிய பிரகாஷ் ஆகியோா் ராஜேஷ் என்பவரது வயலில் விவசாயத் தொழிலாளி லட்சுமி என்பவருடன் இணைந்து பயிற்சி பெற்றனா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நெல் ரகத்தை, வேளாண் கல்லூரி மாணவா்கள் அனுசரணை ஆராய்ச்சி திடலில், வரிசை நடவு முறையில் நடவு செய்தனா்.
தொடா்ந்து மண்ணின் தன்மை, பயிா் வளா்ச்சி, கிளைகள் விடுதல், நெல் மணிகளின் தன்மை, நோய் தாக்குதல், அறுவடை மற்றும் முழு சாகுபடி குறித்து மாணவா்கள் ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பிக்க உள்ளதாகவும், இதற்காக இப்பகுதியில் தங்கி இருந்து கண்காணிக்கவிருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.