பட்டுக்கோட்டை வட்டத்தில் கிராம உதவியாளர் பணி காலியிடம்

பட்டுக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. அருள்பிரகாசம். 
Updated on
1 min read

பட்டுக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. அருள்பிரகாசம். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பட்டுக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட  பாலத்தளி, ஒட்டங்காடு, மகிழங்கோட்டை, ராஜாமடம், சின்னஆவுடையார்கோவில், புதுக்கோட்டகம், பரக்கலக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, விக்ரமம், சிரமேல்குடி, வேப்பங்குளம், தளிக்கோட்டை, ஆலத்தூர், பண்ணைவயல், கூத்தாடிவயல் ஆகிய 15 வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு பணி நியமனம் செய்யவுள்ள கிராமம் அல்லது அதனருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் மட்டும் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பக முதுநிலை வரிசைப்படி நியமனம் செய்யப்படுவர். 
குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம்  வகுப்பு இறுதித் தேர்வில் தோல்வியுற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  தமிழில் எழுத, படிக்கவும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை நேரில் பெற்று, பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் பட்டுக்கோட்டை வட்ட  அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com