மாணவர் தியாகிகள் நினைவு நாள் நிகழ்ச்சி
By DIN | Published On : 01st April 2019 09:09 AM | Last Updated : 01st April 2019 09:09 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் இந்திய மாணவர் சங்க மாவட்டக் குழு சார்பில் மாணவர் தியாகிகள் சோமு -செம்பு நினைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்கள் உரிமைக்குப் போராடி, ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த மாணவர் தியாகிகள் சோமசுந்தரம், செம்புலிங்கம் (சோமு - செம்பு) ஆகியோரது 38 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தியாகிகள் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, கொடி ஏற்றி வைக்கப்பட்டு, வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜி. அரவிந்த்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். மாலதி, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.